சேப்பாக்கம் தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி – உதயநிதி ஸ்டாலின் போட்டி.!

Udayanithi Stalin is contesting against BJP candidate Kassali in Chepauk constituency.

சேப்பாக்கம் தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று திமுக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சேப்பாக்கம் தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

இதனிடையே, சேப்பாக்கம் தொகுதியில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வதே எனது இலக்கு என்றும் தனக்கு வாய்ப்பளித்தால் கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெறுவேன் எனவும் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.