கேட்டது 12.., கொடுப்பது 6 தொகுதிகள்..? ஜி.கே.வாசன்..!

GK Vasan said that AIADMK had asked for 12 constituencies and had allotted 6 constituencies to us.

12 தொகுதிகள் கேட்ட நிலையில், எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் உடன் பல முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை, இதற்கிடையில் நேற்று அதிமுகவின் 2-கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சியான பாமக ,பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கட்சியினருடன் ஆலோசித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாகவே இருக்கிறோம். 12 தொகுதிகள் கேட்ட நிலையில், எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.

6 தொகுதிகள் போதாது என்று அதிகரிக்க கேட்டுள்ளேன். விரைவில் அதிமுக தரப்பில் நல்ல பதில் வந்ததும் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என தெரிவித்தார்.