தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர் மணிகண்டன் இறந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவுசெய்ததையடுத்து மதுரையில் யூடியூபர் மரியதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் யூடியூபர் மரியதாஸை கைது செய்ய சென்றபோது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் “மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்! ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. ஒருபக்கம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொருபக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! இந்த கபட நாடகத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
unknown node