என்னிடம் என்ஐஏ விசாரித்தால் பல உயர் அதிகாரிகளின் பதவி பறிபோகும்.! அண்ணாமலை எச்சரிக்கை.!

என்னிடம் என்ஐஏ விசாரித்தால் என்னிடம் உள்ள ஆவணங்களை அவர்களிடம் தருவேன். அதனால், பல்வேறு உயர் அதிகாரிகளின் பதவிகள் பறிபோகும். - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

என்னிடம் என்ஐஏ விசாரித்தால் என்னிடம் உள்ள ஆவணங்களை அவர்களிடம் தருவேன். அதனால், பல்வேறு உயர் அதிகாரிகளின் பதவிகள் பறிபோகும். – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாகவும், அதற்காக தமிழக காவல்துறை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழக காவல்துறை 12 மணிநேரத்தில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு, 24 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிடுகிறார்.

அவருக்கு எப்படி தகவல்கள் முன்கூட்டியே அவருக்கு எப்படி தகவல்கள் கிடைத்தது. முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி தேவையில்லாமல் பேசுகிறார். ஒருவேளை என்னிடம் என்ஐஏ விசாரித்தால் என்னிடம் உள்ள ஆவணங்களை அவர்களிடம் தருவேன். அதனால், பல்வேறு உயர் அதிகாரிகளின் பதவிகள் பறிபோகும். ‘ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.