கோவை : கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த காரில் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் பயங்கரவாதிகள் சதி இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (NIA) விசாரணையை தீவிரப்படுத்தினர். அவர்கள் எதிர்நோக்கியது போலவே, கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பின்னால், பயங்கரவாதிகள் சதி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய […]
கோவை கார் வெடி விபத்தில் கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் டிசம்பர் 27 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்தான வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் முதலில் முகமது தல்கா , முகமது அசாருதீன் , முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் , அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் […]
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 சிம் கார்டுகளை ஷாரிக் மாற்றியுள்ளார். இந்த குக்கர் குண்டு ஆனது, மைசூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த பயணி ஒருவர் என இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதன் பின்னர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ஆட்டோ ஓட்டிவந்தவர் முகமது ஷாரிக். இவரது சொந்த […]
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்பாக இன்று காலையும் சென்னையில் 4 இடங்களில் இது தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனைகள் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் சோதனை செய்து 106 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு அவர்கள் தீவிர ரகசிய கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களது வீடுகளில் அவ்வப்போது சோதனைகள் தொடர்ந்து வருகின்றன. சென்னையில் மட்டும் இந்த கண்காணிப்பு வளையத்தில் 18 […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எனும் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்த விசாரணையில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்ததை தொடர்ந்து முதல்வர் பரிந்துரையின் […]
கோவை கார் வெடி விபத்து சம்பவத்தை அடுத்து அரசியல் தொடர்பாக இருப்பவர்கள், இஸ்லாமிய இயக்கத்தில் இருப்பவர்கள் என கிட்டத்தட்ட 900 பேரின் விவரங்கள் போலிசாரால் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி உக்கடம் அருகே காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்ததில் முபின் வீட்டில் 76 கிலோ வேதிப்பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முபினுக்கு […]
கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை, உக்கடம் பகுதியில் நடந்த கற் சிலிண்டர் வெடி விபத்து தமிழகத்தில் ஓர் பதற்றத்தை உருவாக்கியது என்றே கூறலாம். இருந்தும் தமிழக காவல்துறையின் துரித நடவடிக்கைகள் பதற்றத்தை வெகுவாக குறைத்தன. தற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழக காவல்துறை உதவியுடன் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெடி விபத்து நடந்த இடம் அருகே உள்ள இந்து கோவிலில் […]
கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக கோவை உக்கடத்தில் முகமது உசேன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான விசாரணையில் முபின் வீட்டிலிருந்து 76 கிலோ வேதிப்பொருட்கள் போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்டன. பின்னர் , இவருக்கு உதவியதாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றனர். இந்த […]
கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து நடைபெற்ற விசாரணையில் முபின் வீட்டில் 76 கிலோ வேதி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 109 வேதிப்பொருட்கள் இருந்ததாக தகவல் வெளியாகின. இதனை அடுத்து போலீசார் விசாரணையில் […]
என்னிடம் என்ஐஏ விசாரித்தால் என்னிடம் உள்ள ஆவணங்களை அவர்களிடம் தருவேன். அதனால், பல்வேறு உயர் அதிகாரிகளின் பதவிகள் பறிபோகும். – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாகவும், அதற்காக தமிழக காவல்துறை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக காவல்துறை 12 மணிநேரத்தில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு, 24 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே பாஜக […]
கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், அசாருதீன் , இடியாஸ், சாஜித், ரிஸ்வான் ஆகியோர் வீடுகளில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களின் சோதனை செய்து 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அடுத்ததாக, அவருக்கு உதவியதாக, முபின் உடன் தொடர்பில் இருந்ததாக […]
கோவை கார் வெடித்த விபத்து விசாரணையில் என்ஐஏ விசாரணை அதிகாரியாக தமிழக காவல் துறையில் இருந்து காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் . கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்து சேதமான கார், மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு பல்வேறு தடயங்கள், 76கிலோ வேதிப்பொருட்கள் கிடைத்திருந்தது. இதனை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, முபினுக்கு உதவியதாக […]
முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை எனவும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை. – பாஜக முழு அடைப்புக்கு தடை கேட்ட வழக்கில் அண்ணாமலை தரப்பு விளக்கம். கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வு தொடர்பாக, ஆளும் திமுக அரசை கண்டித்து வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என பாஜக செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்து இருந்தார். இதற்கு தடை கேட்டு , சென்னை […]
பாஜக அறிவித்துள்ள இந்த பந்த் போராட்டமானது கோவை வியாபாரிகளையும் ,கோவை மக்களையும் வெகுவாக பாதிக்கும். – தமிழ்நாடு வணிகர் சங்க கோவை மண்டல தலைவர் கருத்து. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கார் வெடிப்பு தொடர்பாகவும், அதற்கான ஆளும் திமுக அரசு நடவடிக்கை குறித்து, திமுக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் வரும் 31ஆம் தேதி கோவையில் பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்த் போராட்டம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க கோவை மண்டல தலைவர் […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பரோஸ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் இருப்பவர்களை சந்தித்து பேசியுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்து சேதமான கார், மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு பல்வேறு தடயங்கள், 76கிலோ வேதிப்பொருட்கள் கிடைத்திருந்தது. இதனை […]
கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 நபர்கள் வீடுகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஜமேஷ் முபின் உடன் தொடர்புடையதாக முதற்கட்டமாக முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் என 5 பேரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு, அப்சர் கான் என்பவர் 6வது […]
குறுகிய காலத்திற்குள் விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட கோவை மாநகர காவல்துறைக்கு பாராட்டுக்கள். – டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்கள் சந்திப்பு. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தான் தற்போது வரையில் தமிழகத்தில் தலைப்பு செய்தி. இந்த சம்பவத்தில் ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்துவிட்டார். அவருடன் தொடர்புடைய 6 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். இந்த வழக்கானது தமிழக காவல்துறையிடம் இருந்து முதல்வர் பரிந்துரையின் பேரில் என்ஐஏ அதிகாரிகளிடம் […]
கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக, நெல்லை, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது உசேன் லெப்பை என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கோவை, உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இவரது வீட்டில் இருந்து 75 கிலோ வேதி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. முபின் உடன் தொடர்பில் இருந்ததாக முதற்கட்டமாக முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் […]
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முக்கிய காவல் அதிகாரிகளுடன் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. முபின் உடன் தொடர்பில் […]
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கு விசரணையை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ ஏற்று நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்ற பட்டன. மேலும், […]