சைக்கிள் சின்னத்தில் போட்டி., த.மா.கா.வுடன் அதிமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை.!

The AIADMK is in the second round of talks with the TMC on constituency sharing.

அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுடன் தொகுதி பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் த.மா.கா.வுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக. அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வேலுமணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். சைக்கிள் சின்னத்தில் போட்டியிட த.மா.கா 12 தொகுதிகள் கேட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய த.மா.கா.தலைவர் ஜி.கே. வாசன், சைக்கிள் சின்னத்தை பெறுவதே எங்களுடைய தொடர் சட்ட முயற்சி. அது நடந்துகொண்டு இருக்கிறது. அது இறுதிநாள் வரை தொடரும். சைக்கிள் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். த.மா.கா. இளைஞர் அணியினர் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவார்கள் என தெரிவித்திருந்தார்.

சைக்கிள் சின்னத்தில் போட்டி., த.மா.கா.வுடன் அதிமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை.!