அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுடன் தொகுதி பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் த.மா.கா.வுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக. அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வேலுமணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். சைக்கிள் சின்னத்தில் போட்டியிட த.மா.கா 12 தொகுதிகள் கேட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய த.மா.கா.தலைவர் ஜி.கே. வாசன், சைக்கிள் சின்னத்தை பெறுவதே […]