தமிழகத்தில் திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது – எம்.பி. கனிமொழி..!

The BJP's Annamalai claim that the DMK's foundation is not well laid is ridiculous. Kanimozhi said.

திமுக அடித்தளம் நன்றாக அமையவில்லை என பாஜகவின் அண்ணாமலை கூறுவது நகைச்சுவையாக உள்ளது என எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தீத்தாம்பட்டி கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இந்த  கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. கனிமொழி, தமிழகத்தில் திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் மற்றும் அதிமுகவினர் திமுக ஆட்சி ஏதும் செய்யவில்லை என விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், பதவியேற்ற 100 நாட்களில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். குழந்தைகளுக்கு திருமண செய்யகூடாது; படிக்க வைக்க வேண்டும். பெண்கள் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி முறையாக வழங்க வேண்டும். திமுக அடித்தளம் நன்றாக அமையவில்லை என பாஜகவின் அண்ணாமலை கூறுவது நகைச்சுவையாக உள்ளது.