அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தின சபாபதியின் தம்பியான பரணி கார்த்திகேயன் திமுக வில் இணைந்துள்ளார்.
அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தனது தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தவர் தங்கத்தமிழ்செல்வன்.அவருக்கு திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.இவர் அமமுகவில் இருந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில் திமுகவிலும் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
தங்க தமிழ்ச்செல்வனை போல அமமுகவில் இருந்து விலகி வந்தவர் வி.பி.கலைராஜன்.இவருக்கு திமுகவில் இலக்கிய அணி இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே அமமுகவில் இருந்து விலகி திமுக வந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
unknown nodeஅமமுகவில் இருந்து திமுக சென்றவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று புதுக்கோட்டை அமமுக செயலராக இருந்த பரணி கார்த்திகேயன், சென்னையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ ரத்தின சபாபதியின் தம்பி பரணி கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.