தமிழகத்திற்கு இன்று வந்தடைந்த 4 லட்சம் தடுப்பூசிகளை மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது.
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்வதற்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி, தமிழகத்திற்கு இன்று 4 லட்சம் கொரோனா தடுப்பூசி வந்தடைந்துள்ளது. இதில் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,26,270 கோவாக்ஸின் தடுப்பூசிகளும் உள்ளது. இதனை மாவட்டம் வாரியாக பிரித்து கொடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
unknown node