Ma Subramanian : கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிமணியன் கூறியுள்ளார். சமீபத்தில், உலகம் முழுவதும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்தது. இத்தடுப்பூசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், தடுப்பூசியால் தமிழகத்தில் பின்விளைவு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை […]
உலகம் முழுவதும் கொரோனா காலகட்டத்தில் செலுத்தப்பட்ட கோவிஷீல்டு என்கிற தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. அஸ்ட்ராஜெனகா, ஆக்ஸ்போர்டு பல்கலை உடன் இணைந்து கொரோனாவுக்கான “கோவிஷீல்டு” தடுப்பூசியை உருவாக்கியது. சமீபத்தில், இந்த தடுப்பூசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த முதல் ஆண்டில் மட்டும் சுமார் 65 லட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் […]
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள் உலகை ஆட்டி படைத்த கொரோனாவை கட்டுப்படுத்த உலகில் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டறிந்தனர். இதில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரிட்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனில் உள்ள அஸ்ட்ராஸெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி கோவிஷீல்டு. அதனை சீரம் […]
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்தது. கடந்த 2019ல் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இரண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா வைரஸை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதில் இங்கிலாந்து […]
எஸ்ஐஐ இன் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், பம்பாய் உயர் நீதிமன்றம், இந்திய சீரம் நிறுவனம் (எஸ்ஐஐ) மற்றும் தொழிலதிபர் பில் கேட்ஸிடம் இருந்து பதில் அளிக்க கோரியது. மனுதாரர், திலீப் லுனாவத், கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் இந்திய சீரம் நிறுவனம் முயற்சிகளுக்கு நிதியளித்ததால், பில் கேட்ஸை வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்ததாக, பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. லுனாவத் தனது மனுவில் மருத்துவ […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படுகின்றன.இதனால், கொரோனா பரவல் சற்று குறைந்து இருந்தது. கொரோனா மீண்டும் அதிகரிப்பு: ஆனால்,தற்போது தென் கொரியா,சீனா மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.எனவே தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியாவில் மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. கால அவகாசம் குறைவு?: இந்நிலையில்,கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் […]
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன்பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் […]
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட். உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்தை அடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. விரைவில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி 3 மாதங்களில் செயல் திறன் இழக்கும் என்ற அதிர்ச்சி தகவல் […]
கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு இத்தாலி ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி உலக நாடுகளிடையே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்று ரோமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாவது, கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை இத்தாலி அங்கீகரித்துள்ளதாகவும், தடுப்பூசி செலுத்திய மக்கள் கிரீன் பாஸுக்கு தகுதியுடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. இத்தாலி உட்பட தற்போது மொத்தம் 19 ஐரோப்பிய யூனியன் நாடுகள் கோவிஷீல்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், […]
இங்கிலாந்து அரசாங்கம் கோவிஷீல்டை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இங்கிலாந்தில் தற்போது ‘சிவப்பு’, ‘அம்பர்’ மற்றும் ‘பச்சை’ பட்டியலில் நாடுகளைக் குறிக்கும் ஒரு அமைப்பு உள்ளது.அவை ‘அம்பர் பட்டியலில்’ இந்தியாவை வைத்துள்ளது. இதனால்,இங்கிலாந்திற்கு வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பு ஒரு நபர் ‘அம்பர் பட்டியல்’ நாட்டில் இருந்திருந்தால், அவர் இங்கிலாந்துக்குச் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கொரோனா வைரஸ் சோதனை எடுக்க வேண்டும்.மேலும்,ஒரு பயணி எதிர்மறை கொரோனா பரிசோதனை சான்று இல்லாமல் வந்தால்,அவருக்கு 500 […]
தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதற்கு,தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படடு வருகிறது.அந்த வகையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் போலியோ சொட்டு மருத்து போடும் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நேற்று […]
கோவிஷீல்டு தடுப்பூசியின் கால இடைவெளி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலம் தற்போது 84 நாட்களாக உள்ளது. ஆனால், இந்த தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்தபோது இதன் இடைப்பட்ட […]
இந்தியாவில் போலியான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது மனித உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படக் கூடிய கோவிஷீல்ட் தடுப்பூசியில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து […]
இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மீண்டும் தடுப்பூசி செலுத்தக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சவுதியில் வேலை செய்யும் கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தலாமா என்பது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர் ஏற்கனவே கோவாக்ஸின் இரு தவணைகளையும் செலுத்தியுள்ளார், இருந்தபோதிலும் சவுதியில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் இல்லாத நிலையில் மீண்டும் கோவிஷீல்டு செலுத்திக்கொள்ளலாமா என்று மனுதாக்கல் செய்துள்ளார். இந்த […]
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை பாதித்து வருகிறது. இதன் காரணத்தால் இதிலிருந்து காத்து கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் இந்தியா கோவிஷீல்டு, கோவேக்சீன் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தித்திறனை 120 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக மத்திய அரசு, மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளனர். இது […]
ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தலாமா என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தலாமா..? அல்லது வேண்டாமா..? என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு நபர் முதல் தவணையில் எந்த தடுப்பூசியை செலுத்தி கொள்கிறாரோ அதே தடுப்பூசியை தான் 2-வது தவணையிலும் செலுத்தி கொள்ளும் நடைமுறை உள்ளது. […]
நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் 200 தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையில் கொரோனா தொற்றை குறைக்க பல நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. தற்போது, கொரோனா தொற்றை குறைக்க தடுப்பூசி செலுத்தும் பணியில் அதிக கவனத்தை சென்னை மாநகராட்சி செலுத்தி வருகிறது. சென்னையில் 40-க்கும் மேற்ப்பட்ட மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை சென்னையில் 28,65,576 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை ஒவ்வொரு தடுப்பூசி […]
இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு பிரான்ஸ் நாட்டிற்கு வருவதற்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதேசமயம், சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி மட்டுமே இருந்தது. இதனால் இந்தியா இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை […]
சீரம் நிறுவனம் சிறுவர்களிடம் 2,3 ஆம் கட்ட தடுப்பூசி பரிசோதனை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரஜெனகாவின் கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி சீரம் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மற்ற பிற நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி மக்களால் அதிக அளவில் நம்பி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த தடுப்பூசியை 2-17 வயது சிறுவர்களுக்கு பயன்படுத்துவதற்கான முதற்கட்ட பரிசோதனை நடந்தது. தற்போதும் அதே வயதுடைய சிறுவர்களுக்கான இரண்டாவது மற்றும் […]
கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசியை 10 மாதத்திற்கு பின் போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் உலகம் முழுவதும், பல நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கால இடைவெளி அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பாற்றல் அதிகாரிக்கும் எனக் பல […]