இன்று முதல்…6-12 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி – பிரதமர் அறிவிப்பு!!

6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.அந்த வகையில்,கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,ஏற்கனவே,நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோர்பெவாக்ஸ் … Read more

#BREAKING: இவர்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி – பிரதமர் மோடி அறிவிப்பு

சிறார்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோர்பெவாக்ஸ் தடுப்பூசியும், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தும் பணி … Read more

#BREAKING: 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி!

6-12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல். இந்தியாவில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு DCGI (Drugs Controller General of India) ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்க கூடிய நிலையில், தற்போது அவசர கால பயன்பாடாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் … Read more

உருமாறிய கொரோனாவுக்கு கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது – ஆய்வில் தகவல்!

உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை அழிக்கும் விதமாக நாடு முழுவதும் கோவாக்சின்  மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் மக்களுக்கு பயன் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு டோஸாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது உருமாறி பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக இவை குறைவான நோயெதிர்ப்பு ஆற்றலை கொண்டுள்ளது என கூறப்பட்டது. எனவே, டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் … Read more

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி!

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை சந்தையில் விற்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன்பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் … Read more

பஹ்ரைன் நாட்டில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி …!

பஹ்ரைன் நாட்டில்  அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனவிற்கு எதிராக இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தான் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு  கடந்த வாரம் தான் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கியது. இதனையடுத்து இங்கிலாந்து, ஹாங்ஹாங், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கொசக்சின் தடுப்பூசிகள் அவசரகால … Read more

இத்தாலி : அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவாக்சின் இணைப்பு!

இத்தாலியில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் வரலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒவ்வொரு நாடுகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின்  தடுப்பூசி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்காமல் இருந்தது. எனவே பல நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட இந்திய பயணிகளை … Read more

ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் சேர்க்கப்பட்ட கோவாக்சின்!

ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் சேர்க்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட பயணிகள் ஓமன் நாட்டிற்கு தனிமைப்படுத்துதல் இன்றி செல்லலாம் என அந்நாட்டு அரசு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. தற்பொழுதும் இந்த கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் தனிமைப்படுத்துதல் … Read more

இந்த மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல் அளிக்க வாய்ப்பு…!

இந்த மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசர கால அடிப்படையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் பயன்படுத்தப்படக் கூடிய ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா மற்றும் சீனாவில் பயன்படுத்தப்படும் … Read more

இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மீண்டும் தடுப்பூசி செலுத்தக்கூடாது..!

இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மீண்டும் தடுப்பூசி செலுத்தக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  சவுதியில் வேலை செய்யும் கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தலாமா என்பது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர் ஏற்கனவே கோவாக்ஸின் இரு தவணைகளையும் செலுத்தியுள்ளார், இருந்தபோதிலும் சவுதியில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு ஒப்புதல் இல்லாத நிலையில் மீண்டும் கோவிஷீல்டு செலுத்திக்கொள்ளலாமா என்று மனுதாக்கல் செய்துள்ளார். இந்த … Read more