டெல்லி : லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதன்படி, ஜான்ஸ்கார் (Zanskar), ட்ராஸ் (Drass) , ஷாம் (Sham), நுப்ரா (Nubra), சாங்தாங் (Changthang) ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று […]
தமிழகத்திற்கு இன்று வந்தடைந்த 4 லட்சம் தடுப்பூசிகளை மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்வதற்கு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு இன்று 4 லட்சம் கொரோனா தடுப்பூசி வந்தடைந்துள்ளது. இதில் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,26,270 கோவாக்ஸின் தடுப்பூசிகளும் உள்ளது. இதனை மாவட்டம் வாரியாக பிரித்து கொடுக்கும் முயற்சியில் […]
வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க தி.மு.க முடிவு எடுத்துள்ளது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க. நிர்வாகிகள் பொய் வழக்குகள், சட்ட விரோத ஜனநாயக விரோத கைது நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 5 மாவட்டங்கள். கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வருகிறது. இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டுமே 1755 பேருக்கு கொரோன பாதிக்கப்பட்ட நிலையில் 22 பேர் உயரிழந்துள்ளனர். இதில் 866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் சென்னை முதலிடத்தில் உள்ளது. […]
தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில் சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் […]
தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 3 நாளைக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன மழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் சேலம் , ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் […]