தமிழகத்தில் ஜூலை 15 – தேதி வரை ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் செல்லும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்!

Transport Minister Rajakannappan has said that the 1000 rupees bus pass already purchased in Tamil Nadu will go on till July 15.

தமிழகத்தில் வருகிற ஜூலை 15-ஆம் தேதி வரை ஏற்கனவே வாங்கிய ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் செல்லும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறையை தொடங்கியதை அடுத்து தற்போது கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நான்கு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில் அவசர தேவைகளுக்கு மட்டும் மக்கள் இ-பதிவு செய்து பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல்கட்டமாக 1,400 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள், பேருந்து போக்குவரத்துகள் 4 மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே வாங்கியுள்ள ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதி வரை செல்லும் எனவும், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் என மூன்று வண்ணங்களில் இலவச பேருந்து டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.