உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அவரை குற்றவாளி என அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம்வழங்கியது. மேலும் ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் மேல் முறையீட்டுகாக 30 நாட்களுக்குத் தீர்ப்பு நிறுத்தி வைக்கபடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித்துறை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போது […]
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதியை சொல்லி திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் ராஜகண்ணப்பன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்த ராஜகண்ணப்பன், தற்பொழுது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் ராஜகண்ணப்பனை இலாகா மாற்றியது மட்டும் போதாது, அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 […]
வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை. போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும். பணிக்கு வருகை தரவில்லை எனில் ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 28, 29ல் தொழிற்சங்க ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ள நிலையில், ஊழியர்கள் விடுமுறை எடுக்க […]
பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டுக்கு மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்கியுள்ளது. இந்த பேருந்து சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை; போக்குவரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை புதுப்பொலிவு பெறும். பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு 2,500 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். […]
அரசு பேருந்துகளில் திருக்குறள், உரையுடன் அமைக்கும் பணிகள் 10 நாட்களுக்குள் முடிவடையும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 7291 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 702 குளிர்சாதன பேருந்துகள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் 1400 பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் இயக்கபப்டுகிறது என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். டீசல் பேருந்துகளை விட 5 மடங்கு விலை அதிகமாக மின் பேருந்துகள் இருந்தாலும், அதன் பராமரிப்பு, டீசல் செலவு […]
தமிழகத்தில் வருகிற ஜூலை 15-ஆம் தேதி வரை ஏற்கனவே வாங்கிய ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் செல்லும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறையை தொடங்கியதை அடுத்து தற்போது கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நான்கு மாவட்டங்களில் பேருந்து […]