3 நாள் பயணம்.. தூத்துக்குடி வந்தடைந்த ராகுல்காந்தி..!

Rahul Gandhi arrived at the airport for Thoothukudi.

ராகுல்காந்தி தூத்துக்குடிக்கு விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல் வருகை 3 -நாள் பயணமாக வந்துள்ளார்.

தூத்துக்குடி வந்தடைந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.  விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வழக்கறிஞர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர், ராகுல்காந்தி தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள மண்டபத்தில் உப்பள தொழிலாளர்களை சந்தித்து உரையாடுகிறார்.

பின்பு அங்கிருந்து சாத்தான்குளம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 4:30 மணியளவில், நாங்குநேரி நான்கு வழிச்சாலை பகுதியில் காங்கிரஸ்  பிரச்சாரபொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

3 நாள் பயணம்.. தூத்துக்குடி வந்தடைந்த ராகுல்காந்தி..!