எந்த பதவியுமே இல்லாத உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார் என ஈபிஎஸ் விமர்சனம்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் எத்தனையோ காட்சிகள் இருந்தாலும் பாசமுள்ள கட்சி அதிமுகத்தான். திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் எங்களிடம் பேசி வருகின்றனர் என 3 அதிமுக எம்எல்ஏகளுடன் திமுக பேசி வருவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். திமுக குடும்பக் கட்சி, இது ஒரு கார்ப்பரேட் மாடல், ஆனால், அதிமுக தொண்டர்களால் உருவான கட்சி என தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மட்டுமே, எந்த பதவியுமே இல்லாத அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.
திமுக அரசு சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்குச் சான்று. அதிமுக அலுவலகத்தில் திருடு போனது குறித்து புகார் அளித்தும் விசாரணை முறையாக நடைபெறவில்லை. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதற்குரிய நடவடிக்கை எடுக்கின்ற முதலமைச்சரும் தமிழகத்தில் கிடையாது. நீதிமன்றத்திற்கு சென்ற பின்பு தான் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்கின்றனர் என தெரிவித்த ஈபிஎஸ், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவருடைய கட்சிடை வளர்ப்பதற்காக நடை பயணம் செய்கிறார் என தெரிவித்தார்.