தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது..! சபாநாயகரை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்..!

appavu

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும் என்றும்,  தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் சபாநயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று, இன்று கூடும் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், … Read more

எடப்பாடி தொடர்ந்த வழக்கு: உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

Udhayanidhi Stalin

கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சனாதன சர்ச்சை விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் … Read more

புத்தாண்டு – எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வாழ்த்து!

இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வெற்றியை வழங்கட்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வாழ்த்து. புலரும் புத்தாண்டு அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இருளும், சோகமும் விலகி இருக்க புதிய ஆண்டு பிரகாசம், நம்பிக்கை நிறைந்ததாக இருக்கட்டும். நிறைந்த வளம், ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றியை இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும் எனவும் கூறியுள்ளார்.

தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு – ஓபிஎஸ்

பழனிசாமி பெயருக்கு எதுவும் மத்திய அரசால் அனுப்பப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு. தொண்டர்கள் மூலம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இடையில் பல்வேறு பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமி உருவாக்கினார் என்றும் ஓபிஎஸ் குற்றசாட்டினார். மேலும், அதிமுகவின் அமைப்பு ரீதியான தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் எந்த முடிவை எடுத்திருக்கிறதோ … Read more

அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை குறிப்பிட்டு அதிமுகவுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் தொடர்பாக சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரிமோட் வாக்குப்பதிவு முறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு மாநில தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 16-ல் அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை … Read more

அதிமுக முன்னாள் நிர்வாகி காலமானார் – இபிஎஸ் இரங்கல்

செந்துறை ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர் காலமானதை அடுத்து இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல். பெரம்பலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியக் கழக முன்னாள் செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவருமான பி.கொளஞ்சிநாதன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும், மிகுந்த விசுவாசம்கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு அன்புச் சகோதரர் கொளஞ்சிநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். … Read more

#BREAKING: கரும்பு விவகாரம் – ஜனவரி 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததை கண்டித்து திருவண்ணாமலையில் ஜனவரி 2ம் தேதி ஆர்ப்பாட்டம். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. செங்கரும்பை தமிழக அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், பொங்கல் … Read more

மாநில மாநாடு நடத்த அதிமுக முடிவு.!

தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தகவல். நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநில அளவில் மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநில அளவில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாபெரும் மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்களை குறித்து ஆலோசிக்கவில்லை! அதிமுக தலைமையில்தான் கூட்டணி – ஜெயக்குமார்

அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் என ஜெயக்குமார் பேட்டி. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளியோர் பங்கேற்றனர். மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் கூட்டணி, அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், … Read more

ஓபிஎஸ்-ஐ மீண்டும் இணைத்துக் கொள்ளக்கூடாது – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு!

ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு. சென்னையில் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில், நத்தம் விஸ்வநாதன் மட்டுமின்றி பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என தெரிவித்தாக கூறப்படுகிறது. பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் … Read more