போரில் நீங்கள் தனியாக இல்லை, அமெரிக்கா துணை இருக்கிறது – ஜோ பைடன்

Default Image

நீங்கள் ஒருபோதும் தனித்து விடப்பட மாட்டீர்கள் என்று ஜெலென்ஸ்கியிடம் ஜோ பைடன் கூறியுள்ளார்.

ரஷ்யா- உக்ரைன் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இன்று  வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி தனது நாடு ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையாது என்று கூறியிருந்தார், இதனையடுத்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெலென்ஸ்கியிடம், நீங்கள் ஒருபோதும் தனித்து விடப்பட மாட்டீர்கள், அமெரிக்கா துணை இருக்கிறது.

எவ்வளவு காலம் உக்ரைன் மக்களுக்கு உதவி தேவையோ, அதுவரை ஆதரவளிக்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. மேலும் 1.85 பில்லியன் டாலர் பாதுகாப்பு உதவியின் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக ஜோ பைடன் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்