புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை பெறும் விளாடிமிர் புதினின் உடல்நலம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புதினின் உடல்நலம் மீது, எப்போதும் உலகம் முழுவதும் ஆர்வமாக உள்ளது, உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் ஆரம்பித்து, உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அவரது உடல்நலம் குறித்து உலகம் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. புற்றுநோய்க்கு எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய சிகிச்சை பெற்று வருவதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய வரலாற்றாசிரியரும் […]
உக்ரைன் மீது ரஷ்யா, இன்று 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகின்ற நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா, 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச், பேஸ்புக்கில் தெரிவித்தார். உக்ரைன் தலைநகர் கீவ், உட்பட பல நகரங்களில் […]
ரஷ்யாவின் கோரிக்கைகளை உக்ரைன் ஏற்காவிட்டால், பிரச்சனையை ரஷ்ய ராணுவம் தான் முடிவு செய்யும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன், ரஷ்யாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அது உக்ரைன் மக்களின் நன்மைக்கு தான் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். இல்லையென்றால் ரஷ்யாவின் ராணுவம் தான் முடிவு செய்யும். உங்கள் சொந்த நலனுக்காக ரஷ்யாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் இல்லையென்றால் ரஷ்யாவின் ராணுவமயமாக்கல், கொண்டு உக்ரைன் பகுதிகள் கட்டுப்படுத்தப்படும். ரஷ்யாவின் பாதுகாப்புக்கு வரும் […]
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே மோதலுக்கான அபாயம் அதிகம் இருப்பதாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்றுவரும் வேளையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகள் செய்து வருவதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கான ரஷ்யாவின் தூதர் அனடோலி அன்டோனோவ், அமெரிக்க-ரஷ்யா உறவுநிலை வலுவிழந்து வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரு நாடுகளுக்கிடையே மோதலுக்கான அபாயம் அதிகரித்து வருவதாக அன்டோனோவ் கூறியதாக ரஷ்ய செய்தித்தொடர்பு நிறுவனமான TASS தகவல் தெரிவித்துள்ளது. […]
ரஷ்யாவின் ராணுவ அமைப்புக்கு வடகொரியா, ஆயுதங்கள் வழங்கி வருவதாக அமெரிக்கா கூறியதை வடகொரியா மறுத்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பத்து மாதங்களாக நடைபெற்று வரும் வேளையில், ரஷ்யாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னருக்கு, வடகொரியா ஆயுதங்கள் வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு வட கொரியா ரஷ்யாவுடன் எந்த ஆயுத பரிவர்த்தனையையும் நடத்தவில்லை என்று மறுத்துள்ளது, மேலும் இது வடகொரியா மீது வேண்டுமென்றே பழி போடுவது போல் உள்ளது. சில நேர்மையற்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை […]
நீங்கள் ஒருபோதும் தனித்து விடப்பட மாட்டீர்கள் என்று ஜெலென்ஸ்கியிடம் ஜோ பைடன் கூறியுள்ளார். ரஷ்யா- உக்ரைன் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி தனது நாடு ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையாது என்று கூறியிருந்தார், இதனையடுத்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெலென்ஸ்கியிடம், நீங்கள் ஒருபோதும் […]