ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
ரஷ்யா- உக்ரைன் போருக்கும் மத்தியில் முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி தனது நாடு ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையாது என்றும், அமெரிக்க காங்கிரஸ் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ள பல்லாயிரக்கணக்கான டாலர் உதவி தொண்டு அல்ல, மாறாக உலகளாவிய பாதுகாப்பிற்கான முதலீடு.
அமெரிக்க காங்கிரஸின் ஆதரவு மற்றும் ஜனாதிபதி,அமெரிக்க மக்கள் அனைவரின் ஆதரவிற்கு மிக்க நன்றி என்று ஜெலென்ஸ்கி கூறினார் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.