அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக அதிபராகியுள்ளார். அமெரிக்கத் தேர்தல் விதிமுறைப்படி, தேர்தலில் வெற்றி பெற்றாலும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் அதிபராகப் பொறுப்பேற்கவேண்டும். எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் தன்னுடைய தொண்டர்கள் முன்னிலையில், அதிபராக டொனால்ட் டிரம்ப் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த […]
வாஷிங்டன் : அமெரிக்க வெள்ளை மாளிகையின் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்ற தலைமைச் செயலர் பொறுப்பில் தனது தேர்தல் பிரசாரக் குழு மேலாளரான சூசி வைல்ஸ்ஸை நியமிக்க போவதாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபரின் முதல் நிலை உதவியாளராகச் செயல்படும் அந்த முக்கிய பதிவியில் ஒரு பெண் நியமிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை செயலராக அதாவது முதல் பெண் […]
ரஷ்யா- உக்ரைன் போருக்கும் மத்தியில் முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி தனது நாடு ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையாது என்றும், அமெரிக்க காங்கிரஸ் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ள பல்லாயிரக்கணக்கான டாலர் உதவி தொண்டு அல்ல, மாறாக உலகளாவிய பாதுகாப்பிற்கான முதலீடு. அமெரிக்க காங்கிரஸின் ஆதரவு மற்றும் ஜனாதிபதி,அமெரிக்க மக்கள் […]
கடந்த வாரம் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெள்ளை மாளிகைக்கு இரவு உணவிற்கு வந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வீடியோவில், டொனால்ட் டிரம்ப், “மார்க் ஜுக்கர்பெர்க் அற்புதமானவர். இரவு முழுவதும் என்னை முத்தமிட்டார்.’ நான் உங்களை விரும்புகிறேன், வாழ்த்துகிறேன்,” என்று டிரம்ப் கடந்த சனிக்கிழமை கூறினார். அதன்பிறகு ட்விட்டர் பயனர்கள் டொனால்ட் டிரம்ப் 2021 ஜனவரியில் 45 […]
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய இயல்பு நிலைக்கு நாடு திரும்புவதற்கான முயற்சியாக அமெரிக்கா அரசு கட்டுப்பாடுகளை சமீபத்தில் தளர்த்திய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக உயிரிழப்புகள் ஒரு நாளைக்கு 300 ஐ எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே,நேற்று காலை அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் தினசரி ஆலோசனையில் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தார்.ஆனால் கமலா அவர்களின் கலிபோர்னியா பயணம் […]
அமெரிக்கா:ஜனவரி 19 முதல் இலவச கொரோனா சோதனை கருவிகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கில் வேகமாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,கடந்த ஒரே நாளில் 7,83,206 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,ஒரே நாளில் 2099 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும்,அமெரிக்க மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் 500 மில்லியன் இலவச கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் டெஸ்ட் கிட் வழங்கப்படும் என்றும்,இதனை […]
செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜோ பைடன் சந்திப்பு இரு நட்டு உறவை வலுப்படுத்தும் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் அமெரிக்கா புறப்பட உள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் […]
கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகின்ற ஜனவரி 20- ஆம் தேதி ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். தற்போது வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் டிரம்ப் விரைவில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் காலம் நெருங்கியுள்ளது. இந்நிலையில், இந்த மாதம் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட நினைத்த டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையை தற்போது அலங்கரித்து வருகிறார். வெள்ளை மாளிகையில் செயற்கை […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்துத்துறை அனுமதி அளித்த அடுத்த 24 மணிநேரத்தில், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க திட்டமிடப்படுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் பரவதொடங்கிள கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு […]
அமெரிக்க அதிபர் டிரம்பின் சகோதரரான ராபர்ட் டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் சகோதரனான ராபர்ட் டிரம்பின் உடல்நிலையில் மோசமடைந்தது, இதன்காரணமாக, அவர் நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், அவரின் சகோதரரின் நோய் குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார். அந்த சந்திப்பில், எனக்கு ஒரு அருமையான சகோதரர் இருக்கிறார் எனவும், முதல் […]
“உங்கள் பதவி காலத்தில் நீங்கள் சொன்ன பொய்களுக்கு வருந்தியதுண்டா?” என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் திகைத்து போனார். அமெரிக்க அதிபர் டிரம்ப், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் மக்களிடையே உரையாற்றியபோதும் அவர் ஏராளமான பொய் செய்திகளையும், தவறான தகவல்களையும் தெரிவித்துள்ளதாக அவர்மீது தொடர்ந்து குற்றங்கள் சாட்டப்பட்டுக் கொண்டே வருகிறது. அந்தவகையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்பிடம் ஹஃபிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஷிரிஷ் டேம், “உங்கள் பதவி காலத்தில் நீங்கள் […]
அமெரிக்காவில் டிக்டாக் செயலிகள் தடை செய்வது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும், மாதங்கள் தள்ளிப்போகாது என வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், […]