“இந்த வெற்றி முன்பே தெரியும்”…அதிபர் டொனால்ட் டிரம்ப் நெகிழ்ச்சி பேச்சு!

அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்று அதிபரான டொனால்ட் டிரம்ப் ஃப்ளோரிடா மாகாணத்தில் வெற்றிக்குறித்து நெகிழ்ச்சியாக பேசினார்.

Donald Trump

அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபராகத் தேர்வாகி உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இதுவரை 227 மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபராகும் வாய்ப்பை இழந்தார். ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெற்றியைத் தொடர்ந்து உரையாற்றிய டிரம்பு ” இந்த தேர்தலில் நான் வெற்றிபெறுவேன் என்பது எனக்கு முன்பே தெரியும். என்னைத் தேர்தலில் வெற்றிபெற வைத்த மக்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றியையே தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஆட்சிக்கு வந்துள்ளதால் அமெரிக்க மக்களுக்காகக் கடுமையாக உழைப்பேன். என்னுடைய கடைசி மூச்சு உள்ளவரை நான் அமெரிக்காவுக்காக அயராமல் உழைத்துக்கொண்டே இருப்பேன். கண்டிப்பாக இந்த நேரத்தில் நான் உறுதியான வாக்கைக் கொடுக்க நினைக்கிறேன். அது என்னவென்றால், அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடக மாற்றுவேன்.

இதுவரை அமெரிக்காவில் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறதோ அந்த பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளும் விரைவாக நடவடிக்கை எடுப்பேன். மக்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளனர். அவர்களுடைய நம்பிக்கையை முழுவதுமாக நிறைவேற்றுவேன். என்னுடைய இந்த வெற்றியின் மூலம் எதிர்க்கட்சியின் நம்பிக்கை வீண் போனது. என் மீது பல தடைகள் வைக்கப்பட்டது.. அதனைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளேன் என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இக்கட்டான சூழ்நிலையில் எனக்குள் உறுதுணையாக இருந்த என் குடும்பத்திற்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் பேசினார். டொனால்ட் டிரம்ப் பேசிக்கொண்டு இருந்த போதே அவருடைய ஆதரவாளர்கள் US..US..என கரகோஷமிட்டனர். மேலும், டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாளர்கள் பாராட்டி வருகிறார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi