2021-ம் ஆண்டு குடியரசு தினவிழாவிற்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்!

British Prime Minister Boris Johnson has accepted Modi's invitation, according to sources in the British Embassy in India.

மோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி, 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில், இந்த குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி உள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது அடுத்த ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து,  மோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.