ஐரோப்பிய ஒன்றியம் நம்மளை ஏமாத்துறாங்க! இனிமே 25% வரி..டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!
டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை ஏமாற்றுவதாக கூறியுள்ள நிலையில் விரைவில் பதிலடி கொடுப்போம் என EU தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக, அவர் EU இல் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். திடீரென டொனால்ட் ட்ரம்ப் இப்படி கூறியிருப்பது
அமெரிக்கா மற்றும் EU இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பேசிய டொனால்ட் ட்ரம்ப் “ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, EU-வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, இதை சரிசெய்ய நான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மிகவும் உறுதியாக இருக்கிறேன். எனவே, இனிமேல் EU-ல் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25% வரி விதிக்கப்படும். பொருளாதார ரீதியாக அவர்கள் நம்மளை ஏமாற்றிய காரணத்தால் இந்த மாதிரி நடவடிக்கைகளை நான் எடுக்க இருக்கிறேன்” எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப் இப்படி பேசிய உடனே விரிவாக ஐரோப்பிய ஒன்றியம் தரப்பில் இதற்கு பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. இற்கு பதிலளித்த EU, “நியாயமற்ற வர்த்தக தடைகளுக்கு எதிராக திடமாகவும் உடனடியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. EU ஆணையத்தின் பேச்சாளர், “ஐரோப்பிய ஒன்றியம் உலகின் மிகப்பெரிய சுதந்திர சந்தையாகும், இது அமெரிக்காவுக்கும் பலனளிக்கிறது. அதனை புரிந்து கொள்ளலாம் இருப்பது கவலைபட வேண்டிய விஷயம்” எனவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சரியான பதிலடி கொடுக்கும் என்றும் EU தரப்பு உறுதியளித்துள்ளது.
இரண்டுக்கும் என்ன தொடர்பு?
ஐரோப்பிய ஒன்றியமும் (EU) அமெரிக்காவும் உலகளவில் மிகப் பெரிய பொருளாதார மற்றும் வர்த்தக கூட்டாளிகளாக இருந்து வருகிறார்கள். குறிப்பாக, அமெரிக்கா, EU-விலிருந்து கார்கள், மின்னணிப் பொருட்கள், மருந்துகள், வேளாண் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்கிறது. அதைப்போல, EU, அமெரிக்காவிலிருந்து எரிசக்தி, தொழில்நுட்பம், நிதி சேவைகள் போன்றவற்றை பெறுகிறது.
தாக்கம் என்ன?
ட்ரம்ப், EU அமெரிக்காவை ஏமாற்றுகிறது என்று கூறி, EU-விலிருந்து வரும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப் போவதாக அறிவித்த காரணத்தாலும் அதற்கு பதிலடி கொடுப்போம் என EU தரப்பில் கூறப்பட்டுள்ளதும் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு சில தாக்கங்களும் ஏற்படவாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் அதிகமாக பதற்றமடையும்.EU-விடம் இருந்து வரும் பொருட்கள் (கார்கள், மின்னணுப் பொருட்கள், உற்பத்தி பொருட்கள்) மிகவும் விலையுயர்ந்துவிடும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025