குவெட்டா :பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள துணை ராணுவப் படையான புரோன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps – FC) தலைமையகத்தின் அருகே இன்று (செப்டம்பர் 30, 2025) ஒரு பயங்கர தற்கொலை குண்டுவெடிப்பு நடந்தது. ஒரு தகவலின்படி , துணை ராணுவப் பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்திற்கு வெளியே ஒரு கார் மூலம் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் (சிவிலியான்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட), 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குவெட்டா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு, சில துப்பாக்கிச்சூடு கும்பல்கள் தலைமையகத்தைத் தாக்க முயன்றனர், இதில் 4 தாக்குதல்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாக்குதலுக்குப் பிறகு, அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மதியம் 12:15 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு வெடிப்பு நிகழ்ந்தது, இச்சம்பவம் குவெட்டா முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்கள் தொடர்ந்து அமைதியின்மையை சந்தித்து வருகின்றன. ஆம்.,பலுசிஸ்தான் சமீப நாட்களாக ராணுவத்தை குறிவைத்து தொடர் தாக்குதல்களை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
