பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், சம்பவ நிகழ்ந்த இடத்திலேயே 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரியவந்தது. மேலும், காயமடைந்தோரில் சிலரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி, தற்போது மேலும் 5 பேர் பரிதமபாக உயிரிழந்துள்ளனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதிலும், சிகிச்சை பெற்று […]
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் அமைந்துள்ள பலுசிஸ்தான் ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட தாக்காததால் அங்கிருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனால், சம்பவ இடத்திலேயே 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு நடந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது ஒரு தற்கொலைப் படைத் தாக்குதளாக இருக்கலாம் என […]
பாகிஸ்தான் : பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து அதில் குறிப்பிட்ட நபர்களை சுட்டுக்கொன்றனர். இதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில், சில தீவிரவாத அமைப்புகள் செயல்ப்பட்டு வருகின்றன. அவர்கள் பலுசிஸ்தானை தனி நாடாக பாகிஸ்தானில் இருந்து பிரிக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்து பல்வேறு பயங்கரவாத செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான பயங்கரவாத சம்பவம் இன்று பலுசிஸ்தான் மாகாணம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. முசகைல் மாவட்டத்தில் பலுசிஸ்தானையும் […]
பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணம் கனிம வளங்கள் நிறைந்த பகுதி ஆகும். இருந்தாலும் வளர்ச்சியடையாத பலுசிஸ்தான் பகுதியாகவே உள்ளது.இங்குள்ள ஒரு பிரிவினர் தீவிரவாதத் தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.குச்லாக் என்ற நகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15 பேர் காயமடைந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.