கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டதால் மீண்டும் சுய தனிமைப்படுத்திக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் மூன்று நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த பின்னர் கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.
அந்த வகையில், கடந்த வாரம் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுடைய ஒருவருடன் தொடர்பு கொண்ட பின்னர் சுய தனிமைப்படுத்திகொண்டார் என்று டவுனிங் தெரு செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், பிரதமர் நன்றாக இருக்கிறார், கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை” கடந்த வியாழக்கிழமை டவுனிங் தெருவில் ஜான்சன் சில எம்.பி.க்களுடன் ஒரு ஆலோசனை நடத்தினார். அதில், அவருடன் தொடர்பில் இருந்த எம்.பி. லீ ஆண்டர்சன் என்பவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், போரிஸ் கொரோனா தொற்றுடைய ஒருவருடன் நான் தொடர்பு கொண்டுள்ளதால் நான் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று இன்று NHS டெஸ்ட் மற்றும் ட்ரேஸால் எனக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால், எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, ஆனால் கொரோனா விதிகளைப் பின்பற்றுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
unknown node