கிரீன்ஸ்போரோவில் உள்ள வட கரோலினா விவசாய மற்றும் தொழில்நுட்ப மாநில பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பின், கைகுலுக்க முயன்ற ஜோ பைடனுக்கு யாரும் கைகுலுக்க முன்வராத வீடியோ இணையத்தில் வைரல்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், கிரீன்ஸ்போரோவில் உள்ள வட கரோலினா விவசாய மற்றும் தொழில்நுட்ப மாநில பல்கலைக்கழகத்தில் வியாழன் அன்று 40 நிமிடம் உரையாற்றினார். உரையை முடித்த பின், கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக என கூறி, மேடையில் வலதுபக்கத்தில் திரும்பி கைகுலுக்க முயன்றுள்ளார்.
ஆனால், மேடையில் இருந்தவர்கள் அவருக்கு கை கொடுக்காமல் எழுந்து நின்று கரவோசை மட்டும் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கலிபோர்னியா குடியரசுக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான ஹர்மீத் கே தில்லான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, வெள்ளை மாளிகை மற்றும் பைடன் குடும்பத்தை நடத்துபவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவரை அழகாக காட்டுவதுதான் அவர்களின் வேலை? என பதிவிட்டுள்ளார்.
unknown node