ரஷ்யாவில் தடம் புரண்ட ரயில்.. 100க்கும் மேற்பட்டோர் காயம்.!
ரஷ்யா : 800 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று கமாஸ் ட்ரக் மீது மோதியதில் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் வரை காயமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
20 பெட்டிகள் கொண்ட ரயில், மாஸ்கோவிற்கு தெற்கே 1,200 கிமீ (750 மைல்) தொலைவில் உள்ள கோட்டல்னிகோ நிலையத்திற்கு அருகில் தெற்கு வோல்கோகிராட் பகுதியில் ரயில் தடம் புரண்டுள்ளது. இதனையடுத்து, 324 அவசரகால பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு தகவலின்படி, இந்த விபத்தில் குறைந்தது 110 பயணிகள் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர், சுமார் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
In Russia, a train traveling from Kazan to Adler collided with a Kamaz truck that drove onto the railway tracks.
According to the latest data, 20 people were hospitalized, and about 140 were injured, with the vast majority suffering abrasions and bruises.
A criminal case has… pic.twitter.com/oWgq7oDmLl
— Sputnik (@SputnikInt) July 29, 2024