காற்றில் வேகமாக பரவக்கூடிய புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு-சுகாதார அமைச்சகம் தகவல்...!

Newly mutated coronavirus detected in Vietnam - Ministry of Health information

வியட்நாமில்,காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியட்நாம் அரசின் சுகாதார அமைச்சகம் இணையவழி மாநாடு நடத்தியது. அப்போது

இதுகுறித்து,வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் கியூம் தாங் லாங் கூறுகையில்,”காற்றில் வேகமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸானது வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது.இந்த புதிய வகை வைரஸானது இந்தியா மற்றும் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த வைரஸின் கலப்பினமாக உள்ளது.”,என்று தெரிவித்துள்ளார்.