அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது.! பகவான் ராமர் ஒரு நேபாளி.! – அந்நாட்டு பிரதமர் பேச்சால் சர்ச்சை.!

இந்து கடவுளான ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். அவர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் கூறியதாக நேபாள நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்து கடவுளான ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். அவர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் கூறியதாக நேபாள நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்தியா மற்றும் நேபாள நாட்டுக்கு இடையே சில கருத்து மோதல்கள் நிலவி வந்தது. இந்திய எல்லைகளை உள்ளடக்கி நேபாள அரசு வரைபடத்தை வெளியிட்டு அந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றத்தில் ஒப்புதலும் வழங்கப்பட்டு சர்ச்சையானது.

பின்னர், இந்த கருத்துமோதல்கள் சற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்திருத்து வருகிறது. இந்நிலையில், தற்போது நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி ஒரு சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதாவது, இந்து கடவுளான ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். அவர் ஒரு நேபாளி. பகவான் ராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது.’ என சர்ச்சை கருத்துகளை அவர் கூறியதாக நேபாள நாட்டு ஊடகங்கள் பதிவிட்டு வருகின்றன. இந்த கருத்து தற்போது சர்ச்சையாகி வருகிறது.