வெள்ளை மாளிகையை அலங்கரித்த மெலனியா..!

Trump's wife Melania Trump is currently decorating the White House, planning to celebrate Christmas this month.

கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகின்ற ஜனவரி 20- ஆம் தேதி ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். தற்போது வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் டிரம்ப் விரைவில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் காலம் நெருங்கியுள்ளது. இந்நிலையில், இந்த மாதம் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட நினைத்த டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையை தற்போது அலங்கரித்து வருகிறார்.

வெள்ளை மாளிகையில் செயற்கை மரங்கள், சிவப்பு நிறங்களில் கொடிபோல் படரவிடப்பட்டுள்ள விளக்குகளை கொண்டு பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையில் ஒளி விளக்குகளால் அலங்கரித்துள்ளார்.