இன்றைய நாகரீகமான உலகில் அனைவருமே தங்களது வீடுகளில் தங்களுக்கென்று ஒரு செல்ல பிராணிகளை வளர்க்கின்றனர். அந்த வகையில் செல்ல பிராணிகளை பொறுத்தவரையில், 5 அறிவு படைத்த மிருகஜீவனாக இருந்தாலும், மனிதர்களுடைய நடவடிக்கைகளையும், செயல்களையும் கவனித்து அதுபோலவே, அவைகளும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் ஒருவர் தான் வளர்த்து வந்த நாய்க்குட்டியை குளியல் தொட்டியில் வைத்து குளிப்பாட்டியுள்ளார். அவருடன் இணைந்து அவர் வளர்க்கும், இரண்டு சிம்பன்சி குரங்குகளும், நாய்க்குட்டியை ஷாம்பூ போட்டு குளிப்பாட்டுகிறது.
ஒரு மனிதன் எவ்வாறு நாய்க்குட்டியை குளிப்பாட்டுவானோ, அதுபோலவே சிம்பன்சி குரங்குகளும் குளிப்பாட்டுகிறது. நாயை குளிப்பாட்டி முடித்த பிறகு , சிம்பன்சி குரங்குகளுக்கு அவர் சோப்பு தேய்த்து குளிப்பாட்டுகிறார். சிம்பன்சிகளும், அவருக்கு சோப்பு தேய்த்து விடுகின்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 1 மில்லியனுக்கும் மேலான மக்கள் பார்வையிட்டுள்ளனர். இதனை பார்த்த மக்கள் சிம்பன்சி குரங்குகளை வீட்டில் வளர்ப்பது ஆபத்து என்றும், அதனை வளர்க்க வேண்டாம் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.
unknown node