ஆந்திரா : திருப்பதியில் திவ்யா என்கிற பெண் 2 லட்சம் மதிப்புள்ள நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். டாமி என்கிற இந்த நாய் டிசம்பர் 10-ஆம் தேதி இருவரை பார்த்து குறைத்த நிலையில், அந்த நாயை இரண்டு பேர் முதலில் கல்லை வைத்து எறிந்துள்ளனர். இருப்பினும் நாய் குறைத்ததை நிறுத்தவில்லை என்பதால் ஆத்திரமடைந்த இருவரும் நாயை கத்தியால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் திவ்யா திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் நடந்த […]
குன்றத்தூர் : சிறுகளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தாயை இழந்த கன்று குட்டிக்கு, வளர்ப்பு நாய் பால் கொடுத்த நெகிழ்ச்சி செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை எவ்வளவு அழகானது என்பதை காண்பிக்கும் விதமாக சிறுகளத்தூரில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், சிறுகளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வீட்டின் உரிமையாளர்கள் மாடுகள், நாய்கள் வளர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மாடு ‘மடி நோய்’ ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. உயிரிழந்த அந்த மாட்டுடைய கன்றுக்குட்டி […]
கர்நாடகா : உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா தாலுக்காவில் உள்ள ஷிரூர் என்ற கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை 66 இல் ஒரு மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன் காரணமாக நான்கு வழிச்சாலையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் கனமழை பெய்ததால், தேசிய நெடுஞ்சாலை 776-E மற்றும் தேசிய நெடுஞ்சாலை 66 உட்பட பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே போல், ஹொன்னாவர் […]
Banned Dog: இந்தியாவில் சமீப காலங்களாக மனிதர்களை வீட்டில் வளர்க்கப்படும் சில ஆக்ரோஷமான நாய் இனங்கள் கடித்து உயிரிழப்புக்கு வழியை வகுக்கிறது. இந்நிலையில், பிட்புல், புல்டாக் போன்ற ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி செய்வதற்கும் மற்றும் விற்பனைக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. READ MORE – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய ஆவணம்.! மேலும், தடை செய்யப்பட்ட இனங்களுக்கு விற்பனை உரிமம் […]
பொதுவாகவே வீட்டில் வளர்க்க செல்லப்பிராணிகள் பயங்கரமாக சேட்டை செய்வது உண்டு. ஒரு சில நேரங்கள் அது செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தாலும் சில சமயங்களில் உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் எதாவது செய்துவிடும். அந்த வகையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஒரு நாய் 4,000 டாலர் (ரூ. 3.32 லட்சம்) பணத்தை சாப்பிட்டு அதன் உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிளேட்டன் மற்றும் கேரி லா இருவரும் செசில் என்ற 7 வயது நாயை வளர்த்து வருகிறார்கள். இந்த […]
மத்திய பிரதேசத்தில் மருத்துவமனை படுக்கையில் தூங்கும் நாயின் வீடியோ வைரலானது. மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லமில் மருத்துவமனை படுக்கையில் நாய் ஒன்று தூங்கும் வீடியோ வெள்ளிக்கிழமை(செப் 16) சமூக ஊடகங்களில் வைரலானது. இது மாநிலத்தில் உள்ள “கவலைக்குரிய சுகாதார அமைப்பு” என பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் கண்டித்துள்ளது. மேலும் ரத்லாம் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் பிரபாகர் நானாவரே கூறுகையில், அவர் விடுமுறையில் இருந்ததால் இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என […]
கர்நாடகாவில் வளர்ப்பு நாயின் பிறந்தநாளை கொண்டாட 100 கிலோ கேக் வெட்டி, 4000 பேருக்கு விருந்தளித்த தொழிலதிபர். கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் சிவப்பா மர்தி. இவர் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார். இவர் தனது வீட்டில் செல்லமாக ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய்க்கு கிராஸ் என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த நிலையில் நேற்று இந்த வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, நான்காயிரம்பேருக்கு […]
777 சார்லி என்ற படத்தை பார்த்த கர்நாடக முதல்வர் கதறி அழுதார். கன்னட திரை துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் ரக்ஷித் ஷெட்டி, இயக்குனர் கிரண் ராஜ் இயக்கத்தில் 777 சார்லி என்ற படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இக்கதையின் முக்கிய அம்சம் என்னவென்றால் ஒரு நாய்க்கும் உறவுகளற்ற இளைஞனுக்கும் இடையே உள்ள உறவை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான நிலையில் […]
5 நாட்கள் நாய் உணவை சாப்பிட்டால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என நாய் உணவு தயாரிக்கும் ஆம்னி நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று அதிகமானோர் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுவதுண்டு. அந்த செல்லப்பிராணிகளுக்கு என விதவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாய்களுக்கு உணவு தயாரிக்கும் ஆம்னி என்ற ஒரு நிறுவனம் காய்கறிகள், பழங்கள் கொண்டு தூய்மையான முறையில் மனிதர்களும் சாப்பிடும் வகையில் எந்த ஒரு கெமிக்கல் சேர்க்காமல் உணவு தயாரிக்கின்றனர். இந்த நிலையில் நிறுவனம் […]
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள க்ரீம் கேஸ் எனும் நகரில் வாழக்கூடிய டோபிக் கீத் என்னும் நாய் உலகின் மிக வயதான நாய் எனும் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த நாய்க்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி இருபத்தியோரு வயது ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ள இந்த நாயின் உரிமையாளரான கிசெலா என்பவர் இந்த நாய் குறித்து கூறுகையில், சில மாத குட்டியாக இருந்த பொழுது இந்த நாயை விலங்குகள் காப்பகத்தில் […]
நாய் கடித்து உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி அளித்து உதவிய இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் எனும் கிராமத்தில் குரங்கு ஒன்றை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கண்டித்துள்ளது. இதனால் படுகாயமடைந்த குரங்கு மரத்தில் ஏறி அமர்ந்து அங்கேயே முடியாமல் படுத்துள்ளது. இதனை பார்த்த கார் டிரைவர் பிரபு என்பவர் மரக்கிளையில் இருந்த குரங்கை பத்திரமாக கீழே இறங்கி, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்க முடிவு செய் பின் தனது நண்பர்களுடன் […]
தன்னை கடித்த அண்டை வீட்டுக்காரரின் நாயை அடித்து கொன்ற தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் கோட்டை பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த முனியசாமி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரது வீட்டிலும் நாய் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி இந்த இரண்டு நாய்களும் சண்டையிட்டுக் கொண்ட பொழுது, அதனை விலக்கி இழுத்து செல்ல முயன்ற நாகராஜை முனியசாமியின் நாய் கடித்து வைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், அவரது மகனுடன் இணைந்து மரக்கம்பு […]
மதுரை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு 10% வரி விதிக்கப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு 10% வரி விதிக்கப்படும் என்றும், திடக்கழிவுகளை தெருக்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், தெருவில் வீட்டு நாய் மற்றவர்களை அச்சுறுத்தினாலோ, அசுத்தம் செய்தாலோ ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், இறைச்சி கடை, பிராணி விற்பனை […]
தஞ்சையில் குற்றங்களை துப்பறிவதில்,காவல்துறையினருக்கு மிகவும் உறுதுணையாக இருந்த மோப்ப நாய் உயிரிழந்ததையடுத்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் குற்றங்களை துப்பறிவதில்,காவல்துறையினருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வந்த ராஜராஜன் என்ற மோப்ப நாய் உயிரிழந்துள்ளது. இந்த மோப்பநாய் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளது. இந்த மோப்ப நாய் தஞ்சையில் நடைபெற்ற கொலை, கொள்ளைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதனையடுத்து,ராஜராஜனின் உடல் துப்பறிவு பிரிவு அலுவகத்தில் வைக்கப்பட்டது. அதற்கு காவல்துறையினர் மாலை […]
மத்திய பிரதேசத்தில் தனது மனைவியை கடித்து குதறிய நாயை துப்பாக்கி வைத்து சுட்டுக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடமிருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் எடுத்த சுதாமா எனும் நகரில் வசித்து வரக்கூடிய நரேந்திர விஷ்னோய் என்பவரின் மனைவியை அவரது அண்டை வீட்டுக்காரரான மருத்துவர் வினித் என்பவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. நாய் கடித்ததால் வலி தாங்காமல் விஷ்னோய் மனைவி அலறி துடித்து வீட்டிற்குள் வந்துள்ளார். அதைப் பார்த்து […]
கொரோனா தொற்று உள்ளவர்களை தான் மோப்ப சக்தியை கொண்டு கண்டறியும் மோப்ப நாய். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை அழிக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் எல்.எஸ். எச்.டி.எம்., பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மூலம் ஒருவர் கொரோனா நோயாளியா? என்பதை 94% துல்லியத்துடன் […]
இந்தூரில், நடைபயணம் சென்ற தொழிலதிபர் மற்றும் நாயை கைது செய்த போலீசார். இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதை அடுத்து, மத்திய, மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், இந்தூரில் பாலாசியா பகுதியில், தொழில் அதிபர் ஒருவர் தனது நாயை அழைத்துக்கொண்டு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவ்வூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரோந்து பணியில் போலீசார் […]
முக கவசம் அணியாத கடைக்காரரிடம் அபராதம் கேட்டதற்காக காவலர்கள் மீது தனது நாயை அவிழ்த்து விட்ட கடை உரிமையாளர் கைது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனாவை எதிர்ப்பதற்காக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு கொண்டிருந்தாலும், மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் இருப்பதே முறையான வழி என்பது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாடு முழுவதிலும் அபராதமும் விதிக்கப்பட்டு […]
இங்கிலாந்தில் நாயொன்று விழுங்கிய ஆப்பிள் ஹெட்போனை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கப்பட கூடிய செல்லப்பிராணி நாய் குட்டி ஒன்று ஒரு ஜோடி ஆப்பிள் ஹெட்போன்களை அதன் சார்ஜருடன் சேர்த்து விழுங்கியுள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரக்கூடிய ரேச்சல் ஹூக் எனும் பெண் தனது செல்ல நாய்க்குட்டி ஜிம்மி ஹெட்போனை விழுங்கிவிட்டதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த பொழுது வயிற்றுக்குள் ஒரு ஜோடி ஹெட் போன் இருப்பது […]
காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அவைகள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் வழங்க போலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. பொதுவாக அரசு வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரசு ஓய்வூதியம் வழங்குவது உண்டு. இது மனிதர்களுக்கு தான் அரசு இதுவரை வழங்கி வந்தது. ஆனால் போலந்து நாட்டில் எல்லைப் பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் […]