லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே, தீ பற்றவைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ லண்டன் இல்லமான ராயல் ரெசிடென்ஸ் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாசலுக்கு வெளியே, தீ மூட்டிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
unknown nodeசமூகஊடகங்களில் வெளியான அந்த வீடியோவில் தரையில் படுத்திருந்த அந்த நபர் தீ மூடுவது போன்றும், போலிசார் அவரை தடுத்தும் கைது செய்து அழைத்து செல்வது போல் இருக்கிறது. கிரிமினல் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் சந்தேகத்தின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் போலிசார் மேலும் தெரிவித்தனர்.