உலகின் மிக அழகான மம்மி என்று அழைக்கப்படும் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிறுமி..
ரோசாலியா லோம்பார்டோ, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இரண்டு வயது குழந்தை. ரோசாலியா தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு முன், டிசம்பர் 2, 1920 அன்று நிமோனியா நோயால் இறந்தார். இவர் தான் உலகின் மிக அழகான மம்மி என்று கூறப்படுகிறது.
ஒரு கண்ணாடி சவப்பெட்டியில் ரோசாலியாவின் உடல் பாதுகாக்கப்பட்டு இத்தாலியின் வடக்கு சிசிலியில் உள்ள பலேர்மோவின் கபுச்சின் கேடாகம்ப்ஸில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, சுற்றுச்சூழல் காரணிகளால் உடல் மோசமடைவதைத் தடுக்க கண்ணாடி பெட்டியில் நைட்ரஜன் நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
ரோசாலியாவின் உடல் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் குறிப்பிடத்தக்க வகையில் பாதுகாக்கப்படுவதால் கபுச்சின் கேடாகம்ப்ஸ் ஒரு சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரோசாலியாவை பார்க்க ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள்.
உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களை சந்திக்கும் இடமாக கருதப்படும் கபுச்சின் கேடாகம்ப்ஸில் சுமார் 8,000 சடலங்கள் மற்றும் சுமார் 1,284 மம்மிகள் உள்ளன.