உலக பாஸ்போர்ட் தரவரிசை.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

Henly Passport Index - India Ranking

சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும், மற்ற உலக நாடுகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல விசா பயன்பாடுகள் இன்றி பயணிக்கும் வசதியை கொண்டு அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படும். அதாவது ஒரு நாடு எந்த நாட்டினரை விசா பயன்பாடுகள் இன்றி வரவேற்கிறது எனபதை பொறுத்து அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை தெரியவரும். இந்த பாஸ்போர்ட் வலிமை தரவரிசை பட்டியலை சர்வதேச தரவு ஆராய்ச்சி அமைப்பான ஹென்லி அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் … Read more

40 வயதிற்கு உட்பட்டவரா நீங்கள்.? இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்.! இத்தாலி அசத்தல் அறிவிப்பு.!

Calabria

இத்தாலியில் உள்ள கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு புகழ்பெற்ற அழகிய தெற்குப் பகுதியான கலாப்ரியாவில் பல ஆண்டுகளாக மக்கள்தொகை வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு மக்கள் தொகையைப் பெருக்குவதற்காக ஒரு திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ளது. அந்த திட்டத்தின் படி, நீங்கள் கலாப்ரியா வந்து தங்குவதற்கு, அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு 26,000 யூரோக்கள் (ரூ.26.48 லட்சம்) வரை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. கலாப்ரியாவிற்கு வர ஆர்வமுள்ளவர்கள் நிதி … Read more

உலகிலேயே இத்தாலி உணவு தான் ரொம்ப டேஸ்ட்! இந்தியா 5-வது இடம்.!

2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில், இந்தியா ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. பல்கேரியாவை தளமாகக் கொண்ட அனுபவமிக்க பயண வழிகாட்டி இணையதளமான டேஸ்ட் அட்லஸ், ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில் இந்திய உணவு வகைகள் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இத்தாலிய உணவு வகைகள் முதல் இடத்தைப் பிடித்தன. இதனைத் தொடர்ந்து கிரேக்கம் மற்றும் ஸ்பானிஷ் … Read more

கனமழையால் இத்தாலி தீவில், நிலச்சரிவில் சிக்கி குழந்தை உட்பட 7பேர் உயிரிழப்பு.!

இத்தாலியின் இஷியா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குழந்தை உட்பட 7பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு இத்தாலிய தீவான இஷியாவில் பெய்த கன மழையினால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி, பிறந்த குழந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி தெரிவித்தார். மேலும் 5பேரைக் காணவில்லை என்றும், மீட்புப் பணியாளர்கள் விரைந்து கடலோரப்பகுதியில் தேடி வருகின்றனர். இந்த நிலச்சரிவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து, பல கார்கள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டதாகவும் உள்ளூர்வாசி … Read more

உலகின் மிக அழகான மம்மி என்று அழைக்கப்படும் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சிறுமி..

ரோசாலியா லோம்பார்டோ, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இரண்டு வயது குழந்தை. ரோசாலியா தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு முன், டிசம்பர் 2, 1920 அன்று நிமோனியா நோயால் இறந்தார்.  இவர் தான் உலகின் மிக அழகான மம்மி என்று கூறப்படுகிறது. ஒரு கண்ணாடி சவப்பெட்டியில் ரோசாலியாவின் உடல் பாதுகாக்கப்பட்டு இத்தாலியின் வடக்கு சிசிலியில் உள்ள பலேர்மோவின் கபுச்சின் கேடாகம்ப்ஸில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, சுற்றுச்சூழல் காரணிகளால் உடல் மோசமடைவதைத் தடுக்க கண்ணாடி பெட்டியில் நைட்ரஜன் … Read more

உருகும் பனிப்பாறைகள்: இத்தாலி – சுவிட்சர்லாந்தின் எல்லைகளில் மாற்றம்..

பனிமூட்டமான ஆல்ப்ஸ் மலையில், முன்பை விட வேகமாக உருகி வரும் பனிப்பாறைகள், சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான எல்லைகளை மறுவரையறை செய்து வருகின்றன. மிகவும் வெப்பமான வெப்பநிலை சுவிட்சர்லாந்தின் பனிப்பாறைகளை உருகச் செய்கிறது. இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான எல்லை 800.2 கிலோமீட்டர்கள் வரை செல்கிறது, இதில் பெரும்பகுதி மலைகள். சுவிட்சர்லாந்தின் 7,000லிமீ நீளமுள்ள எல்லையில் மூன்றில் இரண்டு பங்கு ஏரிகள், பனிப்பாறைகள், ஆறுகள் மற்றும் மலைகள் போன்ற இயற்கை எல்லைகளால் ஆனது. உருகி வரும் பனிப்பாறைகளால் எதிர்காலத்தில், சுவிட்சர்லாந்து … Read more

ஏர் இந்தியா விமானத்தில் 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா..!

இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ் இருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா . இத்தாலியில் இருந்து ஏர் இந்தியா விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார். அனைவரது மாதிரிகளும் தற்பொழுது ஓமைக்ரான் & மரபணு பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி … Read more

இத்தாலி : அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவாக்சின் இணைப்பு!

இத்தாலியில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் வரலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒவ்வொரு நாடுகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின்  தடுப்பூசி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்காமல் இருந்தது. எனவே பல நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட இந்திய பயணிகளை … Read more

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த இத்தாலி..!

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு இத்தாலி ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி உலக நாடுகளிடையே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்று ரோமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாவது, கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை இத்தாலி அங்கீகரித்துள்ளதாகவும், தடுப்பூசி செலுத்திய மக்கள் கிரீன் பாஸுக்கு தகுதியுடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. இத்தாலி உட்பட தற்போது மொத்தம் 19 ஐரோப்பிய யூனியன் நாடுகள் கோவிஷீல்டிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், … Read more

இத்தாலியில் 20 மாடி கட்டிடத்தில் பற்றி எரிந்த தீ – வைரல் வீடியோ உள்ளே…!

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் 20 மாடி கட்டிடம் ஒன்று தீ பிடித்து எரிந்துள்ளது.  இத்தாலியிலுள்ள மிலன் நகர் எனும் பகுதியில் 60 மீட்டர் உயரமுள்ள 20 மாடி கட்டிடம் ஒன்றின் 15-வது தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியதும், கட்டிடம் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மேலும் கட்டிடத்திற்குள் … Read more