முக கவசம் அணிய சொல்லிய நபரை தாக்கிய இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை!

An Indian man has been sentenced to seven weeks in prison for assaulting a Singaporean man who told him to wear a face mask.

முக கவசம் அணிய சொல்லிய சிங்கப்பூர் நபரை தாக்கிய இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓரிரு நாடுகளில் மட்டும் தற்போது முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரில் வசித்து வரும் சந்திரசேகர் என்பவர் முக கவசம் சரியாக அணியவில்லை என்பதற்காக தன்னார்வலர் ஒருவர், அவரிடம் முகக்கவசத்தை சரியாக அணியுமாறு  கூறியுள்ளார். இந்நிலையில் தன்னை முகக்கவசம் அணிய சொல்லிய தன்னார்வலரை அந்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து இது தொடர்பாக இந்திய நபர் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில், தன்னார்வலரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் சந்திரசேகர் என்பவருக்கு ஏழு வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.