முக கவசம் அணிய சொல்லிய சிங்கப்பூர் நபரை தாக்கிய இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓரிரு நாடுகளில் மட்டும் தற்போது முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கரூரை சேர்ந்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கரூரில் கடந்த 2019-ஆம் ஆண்டு பள்ளி சென்று வீடு திரும்பிய மூன்றாம் வகுப்பு படிக்க கூடிய சிறுமியை 40 வயதான சரவணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக கரூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளிக்கு […]
அமெரிக்காவில் வசித்து வரக்கூடிய இந்தியர் கால்சென்டர் நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் வசித்து வரக்கூடிய 34 வயதுடைய இந்தியர் தான் ஹிமான்சு. இவர் நடத்தி வர கூடிய கால் சென்டர் மூலமாக கம்பியூட்டர்களை சரி செய்து தருவதாக அமெரிக்கர்களை குறிவைத்து 5 ஆண்டுகளுக்கு மேலாக இவர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து அமெரிக்காவை சேர்ந்த பலர் இவரது விளம்பரத்தை கண்டு தங்கள் […]
கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லாலுவுக்கு சிறையில் தோட்ட வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால விசாரணை முடிந்து ராஞ்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு சிறையில் தோட்ட வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளார். காலை 9 மணி முதல் 3 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் தோட்ட வேலை செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு ஒரு நாளைக்கு 93 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்று […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டணை விதித்து மகிளா நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.