இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Indian Foreign Minister Jaishankar has met with Sri Lankan President Gotabhaya Rajapaksa to enhance bilateral relations.

இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனாவின் அழைப்பின் பேரில் 3 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி குணவர்தனாவை சந்தித்துப் பேசிய ஜெய்சங்கர், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மீனவர் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் பின் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து இருவரும் சிறிது நேரம் உரையாடி உள்ளனர். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.