இந்தியாவின் ஏற்றுமதி கொள்கை… நன்றி தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்.!

Maldives - India

Maldives : இந்தியாவின் ஏற்றுமதி கொள்கை குறித்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி லட்சதீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சுற்றுலா செல்ல விரும்புவோர் இந்திய தீவான லட்சத்தீவுக்கு வாருங்கள் என பதிவிட்டு புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு மாலத்தீவு அமைச்சர்கள், இந்தியா எவ்வளவு முயற்சி செய்தாலும் மாலத்தீவு அளவுக்கு சுற்றுலா தரத்தை அளிக்க முடியாது என பதிவிடும் வகையில் கருத்து கூறியிருந்தனர். இந்தியாவுக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் … Read more

கட்சத்தீவை கேட்டால் தக்க பதில் அளிப்போம்… இலங்கை அமைச்சர் பரபரப்பு.!

Katchatheevu Island

Katchatheevu : கட்சத்தீவை தீவை இதுவரை இந்தியா திருப்பி கேட்கவில்லை என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த கச்சதீவு கடந்த 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான தகவல்களை தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெற்று, அண்மையில் அதனை பகிர்ந்து இருந்தார். அதில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளாலே கச்சத்தீவு இலங்கைக்கு சென்றதாக குற்றம் சாட்டினார். மேலும், இது தொடர்பாக … Read more

சீன ஆக்கிரமிப்பு.., பெயர் மாற்றினால் வீடு சொந்தமாகாது.! ஜெய்சங்கர் விளக்கம்.!

External Minister Jaishankar

Jaishankar : உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால் அது என் வீடாக மாறிவிடாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சீனா தங்கள் நாட்டுடன் இணைத்து பெயர் வெளியிடுவது, அங்கிருந்து வருபவர்களுக்கு இந்திய விசா என குறிப்பிடாமல் சீனாவின் குறிப்பிட்ட பெயரை வைத்து விசா பதிவிடுவது என பல்வேறு சர்ச்சை வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. ஏற்கனவே, கடந்த 2017, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சல பிரதேச சில … Read more

கச்சத்தீவு விவகாரம்! 21 முறை முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் – ஜெய்சங்கர் விளக்கம்!

Jaishankar

Kachchatheevu: கச்சத்தீவு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன் என்று மத்திய  அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். கச்சத்தீவு ஒப்பந்தம் விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 1974ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தப்படி கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. ஆனால், இரண்டு ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தத்தால் அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1974 … Read more

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு வலுவாக உள்ளது! அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்….

Blinken

2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறும் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, ஐந்தாவது முறையாக இன்று நவம்பர் 10ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று காலை 10 மணி அளவில் டெல்லியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் … Read more

#BREAKING: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்களை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கைகோரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மீன்பிடிப் படகின் உரிமையாளர்கள், … Read more

#BREAKING: இந்திய -சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது..!

டெல்லியில் இந்தியா- சீனா இடையே வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருடன்  சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சினை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் … Read more

இந்தியர்களுக்கு உதவ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை!

உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை. ரஷ்யா – உக்ரைன் இடையே இடைவிடாத போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் ருமேனியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியர்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்கள் மூன்றாவது விமானத்தில் இன்று காலை மும்பை வந்தனர். ருமேனியாவில் இருந்து … Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் கடிதம். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இன்று அதிகாலையில் ரஷ்யா, உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள் குறித்து வெளியுறவுத்துறை உடனடி கவனத்தை ஈர்க்க விழைவதாகவும். … Read more

#Breaking:தேமுதிக பிரமுகருக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு!

கடலூர்:தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடலூரில் தேமுதிக பிரமுகரும்,பிரபல தொழிலதிபருமான ஜெய்சங்கர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி,விருத்தாச்சலத்தில் உள்ள பள்ளி,நெய்வேலியில் உள்ள நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். இவர் கடந்த தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.