கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

At least 17 soldiers have been killed in a helicopter crash involving 23 soldiers in Kenya.

கென்யாவில் 23 ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டில் வழக்கமான பயிற்சிக்காக ஹெலிகாப்டர் ஒன்று தலைநகர் நைரோபியில் இருந்து நேற்று புறப்பட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 23 ராணுவ வீரர்கள் இருந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் நைரோபியில் புறநகர் பகுதியில் காலை 8 மணி அளவில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

திடீரென ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 23 ராணுவ வீரர்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.