அமெரிக்கா : அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹெலிகாப்டர் ஒன்று வானொலி கோபுரத்தில் மோதி, வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் தனியாருக்குச் சொந்தமான ராபின்சன் R44 என்கிற ஹெலிகாப்டரில் பயணம் செய்த குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஹூஸ்டனில் உள்ள எலிங்டன் ஃபீல்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டர் இடித்த உடன் தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் கீழே விழும் கோரமான விபத்தின் காட்சி இணையத்தில் […]
புனே : மகாராஷ்டிர மாநிலத்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. புனே அருகேவுள்ள பவதான் பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இன்று காலை 6:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் உடல் கருகி பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த மூன்று பேரில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் என தெரிய வந்துள்ளது. ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்தது. சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வண்டிகள் […]
மகாராஷ்டிரா : மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், ஆற்றுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மும்பையில் இருந்து ஐதராபாத் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமானது. இதில், பலி எதுவும் ஏற்படவில்லை. படுகாயத்துடன் மீட்கப்பட்ட 4 பேர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவரின் நிலை […]
Amit Shah: மத்திய அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் திடீரென சமநிலையை இழந்ததால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து நல்வாய்ப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிர் தப்பியுள்ளார். அதாவது, தேர்தல் பரப்புக்காக இன்று பீகார் மாநிலம் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு நடந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர். […]
PM Modi: அரசியலுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு உதயவியதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல் ராகுல் காந்தியும் பிரதமர் மோடி அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தனது அரசியல் எதிரிகளான காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் […]
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். கேதார்நாத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கருட் சட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குப்தகாசியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்பொழுது கருட் சட்டிக்கு மேலே ஹெலிகாப்டர் தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர், விரைவில் விசாரணை தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மோசமான வானிலை […]
குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான முப்படைகளின் விசாரணை அறிக்கை தாக்கல். கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். முப்படைகளின் குழு ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து முழு அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜிநாத் சிங்கிடம் ஹெலிகாப்டர் விபத்து தோதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த விசாரணை […]
குன்னுரில் அருகே ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து மோசமான வானிலையே காரணம் என தகவல். கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி குன்னுர் அருகே Mi-17V5 என்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலகின் மிக அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர் […]
ஹெலிகாப்டர் விபத்து குறித்து முழுமையான விசாரணை முடியும் முன்பு எந்த விவரங்களையும் சொல்ல விரும்பவில்லை என விமானப்படை தளபதி. கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி […]
ஹெலிகாப்டர் விபத்தின்போது சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு மார்க் போட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. திருவண்ணாமலையில் இன்று மண்டல பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின்போது, தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் ஊடகத் துறையினர் சிறப்பாக செயல்பட்டனர். உயிரைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் எரியும்போது தீயில் இருந்த ராணுவ வீரர்களைத் […]
ஹெலிகாப்டர் விபத்து குறித்து நான் தான் பாலா என்ற முகநூல் கணக்கில் செய்தி பதிவிட்டவர் மீது 3 பிரிவுகளில் கோவைகாவல் துறை வழக்கு பதிவு. இதுகுறித்து கோவை மாநகரக்காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரம், “நான் தான் பாலா” என்ற முகநூல் கணக்கில் கடந்த 08.12.2021-ஆம் தேதி இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறித்து அநாகரீகமான முறையில் பிரதமர் அவர்களை தொடர்புபடுத்தி செய்தி மற்றும் கார்ட்டுன் […]
குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடந்து கவலைக்கிடமாக உள்ளது என லெப்டினன்ட் ஜெனரல் அருண் தகவல். குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈடுபட்ட மீட்புப்பணிகளுக்கும், உதவியர்களுக்கான பாராட்டு விழா வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் […]
ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் தந்த இரண்டு பேருக்கு தலா ரூ.5,000 பரிசளித்தார் லெப்டினண்ட் ஜெனரல் அருண். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த இரண்டு பேருக்கு தலா ரூ.5,000 பரிசளித்தார் தென்பிராந்திய லெப்டினண்ட் ஜெனரல் ஏ.அருண். இந்த விபத்து குறித்து தகவல் அளித்த கிருஷ்ணசாமி மற்றும் குமார் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டினார். மேலும், ஹெலிகாப்டர் விபத்தின்போது உதவிய நஞ்சப்பத்திரம் மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார். கடந்த 8-ஆம் தேதி […]
ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவை முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிபின் […]
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை பார்வையிடுகிறார் புதிய ராணுவ தளபதி. குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை புதிய ராணுவ தளபதி நரவனே பார்வையிடுகிறார். காலை 10.30 மணியளவில் வெலிங்டனில் அஞ்சலி செலுத்திவிட்டு விபத்து நடந்த இடத்தை பார்வையிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் […]
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பதற்கு ஒருநாள் முன்னதாக பேசிய காணொளி வெளியீடு. 1971-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதின் 50 ஆண்டு பொன்விழா தினம் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் இன்று கொண்டாடப்பட்டு ‘ஸ்வர்னிம் விஜய் பர்வ்’ திறக்கப்பட்டது. இந்த விழாவை தொடங்கி வைத்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை இழந்து நாடு சோகத்தில் மூழ்கி இருப்பதால் […]
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம். கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் 80% தீக் காயத்துடன் மீட்கப்பட்டு, பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை […]
கேப்டன் வருண் சிங் விரைந்து குணமடைய ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் கடந்த 8 ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது பெங்களூருவில் உள்ள விமானப்படை […]
பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதை செலுத்திய பின்னர் தகனம் செய்யப்பட்டது. குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு நேற்று இரவு 8 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகளின் […]
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொங்கியது. குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 13 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 ராணுவ வீரர்கள் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு நேற்று இரவு 8 மணி அளவில் 13 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 […]