இலங்கையில் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

Heavy rains in Sri Lanka have caused severe floods in many parts of the country. Four people have been killed and seven others missing in a landslide caused by floods.

இலங்கையில் கன மழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பெருங்கடலின் அருகில் இருக்கக்கூடிய தீவு நாடாகிய இலங்கையின் 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் சாலை பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது.

அதிக அளவில் கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை கொழும்பு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.