உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பொருளாதார அவசரநிலையை பிறப்பித்துள்ளார். இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரம் சற்று சிக்கலை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வருடமாக கொரோனா பரவல் காரணமாக நாட்டின் வருவாய் துறையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அன்னிய செலவாணி இருப்பு குறைந்து, இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் […]
இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்தியா 740 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளது. இலங்கை அரசு 2030- ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபுசாரா மூலங்கள் வழியாக உற்பத்தி செய்வதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையும் விதமாக சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இலங்கைக்கு சுமார் 740 கோடி கடன் உதவியாக வழங்கியுள்ளது. இந்த […]
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல மதுரையில் வந்து தங்கியிருந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சிங்களவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையிலிருந்து கனடாவிற்கு செல்வதற்காக கள்ளப்படகின் மூலமாக தூத்துக்குடி வழியே வந்து மதுரையில் தங்கியிருந்த இரண்டு சிங்களர்கள் உட்பட 23 இலங்கையை சேர்ந்த நபர்களும், ஏஜன்ட் ஒருவரும் என 24 பேர் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை கப்பலூரில் வீடு எடுத்து சட்டவிரோதமாக இலங்கையை சேர்ந்தவர்கள் கடந்த பத்து நாட்கள் தங்கி […]
இலங்கையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இலங்கையிலுள்ள கம்பா, இரத்தினபுரா, கொழும்பு, பட்டாளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அங்கு உள்ள களனி, தெதரு, களு உள்ளிட்ட சில ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் […]
இலங்கையில் கன மழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலின் அருகில் இருக்கக்கூடிய தீவு நாடாகிய இலங்கையின் 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் சாலை பகுதிகள் அனைத்தும் […]
இலங்கையில் வருகின்ற 28-ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர உள்ள நிலையில், தற்போது ஜூன் 7-ஆம் தேதி வரையும் இந்த ஊரடங்கு நீக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலுமே கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தீவு நாடான இலங்கையிலும் தினமும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த […]
இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் கொரோனா தாக்கும் பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சில சிறிய அளவிலான நாடுகள் அல்லது தீவுகளில் வசிக்கக்கூடியவர்கள் குறைந்த அளவிலான மக்கள் தொகை கொண்டிருப்பதால் கொரோனாவின் தாக்கம் அங்கு சற்று குறைவாக காணப்படுகிறது. ஆனால், 2.1 கோடி மக்கள் தொகை […]
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சீரம் நிறுவனத்தின் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கை அரசு பெற்றுக்கொண்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டு, தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் நன்கொடையாகவும் விநியோகிக்கப்பட்டும் வருகிறது. இந்த தடுப்பூசி ஏற்கனவே இலங்கைக்கு குறிப்பிட்ட அளவு இந்தியாவால் அனுப்பப்பட்டு இருந்தது. இது முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு […]
இந்தியாவிடமிருந்து இலங்கை ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவின் வீரியத்தை குறைப்பதற்காக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த தடுப்பூசி இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்படவும் செய்கிறது, நன்கொடையாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே […]
இந்த ஆண்டு காதலர் தினம் கொண்டாடுவதற்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி ஏற்பாடு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கோலாகலமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவ காரணமாக காதலர் தின கொண்டாட்டங்கள் தடை செய்யப்படுமா என சில இடங்களில் […]
இலங்கையில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்களால் அங்குள்ள மக்கள் கடலின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இருக்குமோ என அச்சம் தெரிவிக்கின்றனர். பொதுவாக கடல் வாழ் உயிரினங்கள் வழி தவறுவதாலோ அல்லது கடலில் ஏற்படக்கூடிய மாறுபட்ட சூழ்நிலை காரணமாகவோ கரை ஒதுங்குவது அல்லது இறந்து கூட்டமாக கடல் நீரால் அடித்து கரைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். இந்நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பு கடற்கரையில் கடந்த சில தினங்களாக கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுக்கியுள்ளது. உயிருடன் கரை ஒதுங்கியதால் மக்கள் […]
இலங்கையிலிருந்து வந்து உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர்தான் தர்ஷன். அதன் மூலம் அவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் சொந்தக்காரரானார். இந்நிலையில், தனது இணைய தள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடும் தர்ஷன், தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ இது அந்த புகைப்படம், View […]
இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து முதல் வெளிநாட்டு சுற்று பயணமாக நேற்று வெளிநாடுகளுக்கு புறப்பட்டார். நேற்று மாலை மாலத்தீவுக்கு சென்ற நிலையில் இன்று இரண்டாம் நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையின் கொழும்பு நகர விமான நிலையத்தில் அந்நாட்டு, குடியரசுத் தலைவர் ரணில் விக்ரம்சிங் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மலர்க்கொத்து குடுத்து வரவேற்றார். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நிலையில் பிரதமரின் வரவேற்பு குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்தார்.மேலும் அவர் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.அப்போது தேவஸ்தான அதிகாரிகள் ராஜபக்சே_வுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜபக்சே சுவாமி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது என்றும் , இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விவாதம் குறித்து சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில், இந்திய நாட்டின் கல்வி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெறுகின்றது. இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த கண்காட்சியில், இந்திய நாட்டில் கல்வி பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும் , சலுகைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், கல்வியாளர்கள் , மாணவர்கள் மற்றும் அறிஞ்சர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை மன்னாரில் உள்ள புதைக்குழியில் இருந்து இதுவரை 256 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை, மன்னார் பகுதியில் உள்ள புதைக்குழியின் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இந்த அகழ்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. புதைக்குழியில் இருந்து இதுவரை 256 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாகவும், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச வெளிநாடு […]
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வாகனங்கள் எரிந்து நாசமாகின. இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நேற்று நள்ளிரவில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டை அங்கே இருந்த வீடு ஒன்றின் மீது வீசி விட்டு சென்றது. இதனால் அந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை எரிந்து நாசமாகின. வீட்டின் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். dinasuvadu.com
இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை தோற்கடிப்போம் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் இருமுறை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் குரல் மூலம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிபர் சிறிசேனா அதை நிராகரித்தார். இந்த நிலையில் ஆட்சியை கலைத்த பின்னர் புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை ரணில் கூட்டணிக்கு இல்லை என்றும் மீண்டும் நம்பிக்கை இல்லா […]
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். பெயர் வெளியிட விரும்பாத அந்த பெண்ணின் சார்பில் அவரது குற்றச்சாட்டை பாடகி சின்மயி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- எனது பெயரை சொல்ல விரும்பவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மும்பையில் இருந்த போது நடந்த சம்பவம் இது. அப்போது அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்த எனது தோழியை சந்திக்க சென்றேன். அங்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மூலம் பிரபலமான இலங்கை […]
முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கூட்டுக்குழுவாக இணைந்து கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, ஆதரவு தெரிவித்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கேவின் தவறான பொருளாதார கொள்கைகளால், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருப்பதாக எதிர்க்கட்சி கூட்டுக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இலங்கை சென்ட்ரல் வங்கி பாண்டுகளை((Bonds)), 2015 மற்றும் 2016ல் வழங்கியபோது முறைகேடு நடைபெற்றதாகவும், சிங்கப்பூரைச் சேர்ந்த அர்ஜூன் மகேந்திரனை சென்ட்ரல் வங்கி கவர்னராக நியமித்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. எனவே, பிரதமர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி, […]