சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் ஆலையில் இந்தியர்கள் 50-க்கும் மேற்பட்ட வேலை செய்து வந்தனர்.இந்த தொழிற்சாலையில்இன்றும் வழக்கம் போல அனைவரும் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த எரிபொருள்நிரப்பிய டேங்கர் லாரி திடீர்ரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தீ தொழிற்சாலை முழுவதும் பரவியது.இந்நிலையில் இந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
unknown node130-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறந்த 23 பேரில் 18 பேர் இந்தியர்கள் அதில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என சூடானில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.