வைரல் வீடியோ: நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் .! அதிர்ந்துபோன வாகன ஓட்டிகள் .!

கியூபெக் நகரத்தில் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்.

கியூபெக் நகரத்தில் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்.

கடந்த வியாழக்கிழமை காலை கியூபெக் நகரத்திற்கு அருகே ஒரு நெடுஞ்சாலையில் ஒரு சிறிய ரக விமானம் தரையிறங்கி இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செயின்ட் அகஸ்டின்-டி-டெஸ்மூர்ஸ் நகராட்சிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை 40 -ல்  ஒரு சிறிய ரக விமானம் காலை 10 மணிக்கு தரையிறங்கியது.நெடுஞ்சாலையில் விமானம் இறங்குவதை அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள்  பார்த்து காலை 10:40 மணியளவில் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாகாண காவல்துறை ஹெலன் நெப்டன் கூறுகையில் ,மேற்கு நோக்கிய நெடுஞ்சாலை 40 இல் ஒரு விமானம் தரையிறங்குவதாகக் அழைப்புகள் எங்களுக்கு வந்தன. இந்த விமானம் ஏன் அவசர அவசரமாக தரையிறங்கியது என்று தெரியவில்லை.

unknown node

அதிர்ஷ்டவசமாக, விமானம் எங்கும் மோதாமல் தரையிறங்கியது. இதனால், யாருக்கும் காயமடையவில்லை என்று  தெரிவித்தார்.இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி, 1.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.