ஏழை குழந்தைகளுக்காக நன்கொடை கேட்கும் "ஊனமுற்ற சாண்டா"

A video showing a disabled Brazilian man dressed as Santa Claus and asking for donations for needy children on his skateboard

பிரேசிலை சேர்ந்த ஊனமுற்ற ஒருவர், சாண்டா கிளாஸ் உடையணிந்து தனது ஸ்கேட்போர்டில் தேவைப்படும் குழந்தைகளுக்கு நன்கொடை கேட்கும் வீடியோ, வைரலாகி வருகிறது.

உலகளவில் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதற்காக குழந்தைகள் சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசளிப்பார் என குழந்தைகள் நம்பி வருகின்றனர். அந்தவகையில், பிரேசிலை சேர்ந்த ஊனமுற்ற மனிதர் ஒருவர், சாண்டா கிளாஸ் உடையணிந்து தனது ஸ்கேட்போர்டில் தேவைப்படும் குழந்தைகளுக்கு நன்கொடை கேட்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

அந்த ஊனமுற்றோர், தனது ஸ்கேட் போர்டில் சாண்டா கிளாஸ் உடையணிந்து, ட்ராபிக்கில் ஏழை குழந்தைகளுக்காக நன்கொடை கேட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், தான் சாண்டா கிளாஸ் உடையணிந்து 600 குழந்தைகளுக்கு உதவி சேகரிக்கவுள்ளதாகவும், அதற்காக மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், மக்களையும் குழந்தைகளுக்கு உதவுமாறும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பான விடீயோ, தற்பொழுது வைரலாகி வருகிறது.

unknown node