Crocodile Attack: தந்தை கண்முன்னே நடந்த கொடூரம்..! முதலையால் பலியான 1 வயது மகன்..!

மலேசியாவில் தனது தந்தையுடன் மீன்பிடித்து கொண்டிருந்த 1 வயதான சிறுவனை முதலை ஒன்று உயிருடன் தின்றுவிட்டது.

மலேசியாவில் தனது தந்தையுடன் மீன்பிடித்து கொண்டிருந்த 1 வயதான சிறுவனை முதலை ஒன்று உயிருடன் தின்றுவிட்டது.

மலேசியா: சபாவில் உள்ள லாஹாட் டத்து என்ற கடற்கரையில் 45 வயதாகிய தனது தந்தையுடன் மீன் பிடித்து கொண்டிருக்கையில், 11 அடி கொண்ட முதலை ஒன்று சிறுவனை இழுத்து உயிருடன் தின்றது. அந்த முதலையிடம் இருந்து தனது மகனை காப்பாற்ற முயன்ற தந்தையின் முயற்சி வீணானது. மகனை காப்பாற்றும் முயற்சியில் அவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டன.

கடினமாக போராடிய பிறகும் அவரால் தன் மகனை காப்பாற்ற இயலவில்லை. தலை மற்றும் உடலில் காயங்களுடன் கிராமவாசிகள் அவரை மீட்டனர். இது குறித்து லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுத்தலைவர் சும்சோவா ரஷித், தந்தைக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மகன் இன்னும் காணவில்லை, தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார்.

பலத்த காயங்கள் கொண்ட அவரது தந்தை லாஹாட் டத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த சிறுவனின் உடலை ராயல் மலேசியன் காவல்துறை மற்றும் கடல் காவல் துறையினர், உள்ளூர் தீயணைப்புத்துறையுடன் இணைந்து தேடி வருகின்றனர்.

unknown node